அறிமுகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.

அல்லாஹ் கூறுகிறான்: –

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3:110)

”(லுக்மான் (அலை) தம் புதல்வரிடம்) ‘என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்’ அல்-குர்ஆன் 31:17)

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்-குர்ஆன் 3:104)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்-குர்ஆன் 103:2-3)

மேற்கண்ட இறை கட்டளைகளுக்கு ஏற்ப தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் விளக்கும் முகமாக இந்த சிறிய முயற்சி. எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் இந்த முயற்சிக்கு பலன் தரவேண்டுகிறோம்.

தங்களின்,
இஸ்லாமிய ஊழியன்,

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *